வெள்ளி, 21 அக்டோபர், 2011

தமிழின் நீதி நூல் வரிகள்



கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்: ஈன்றெடுத்த தாய்வேண்டாள்
செல்லா தவன்வாயிற் சொல்!

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கதனை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


வருந்தி அழைத்தலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா இருந்தோங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.


நாப்பிளக்கப் பொய் பேசி நவநிதியம் தேடி
நலமொன்றும் இல்லாத நாரியரைக் கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போலப்
பொலபொலனக் கலகலெனப் புதல்வர்களைப் பெருவீர்
காப்பதற்கும் வழியறீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்திட்ட குரங்கதனைப்போல
அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீர் நீரே!

அனைத்து வரிகளும் தமிழின் நீதி நூல்கலிள் இருந்து எடுத்த மிகப் பிரபலமான நீதி வரிகளாகும்


நன்றியுடன்

சங்கர்

கருத்துகள் இல்லை: