வெள்ளி, 2 டிசம்பர், 2022

யாருமற்ற சிலுவை


 
இவர்கள் சொல்லும் கலிகாலம் என்றாலும் சரி...
அவர்கள் சொல்லும் மீட்பரின்
வருகைக்காலம் என்றாலும் சரி...
நிகழ்காலம் என்னவோ
பிழைப்பைத்தேடி நிலையில்லா ஓட்டத்தில்
காலடியில் மிதிபடும் நெருக்கடியில்...
 
இந்த உலகத்தின் நாட்கள் எண்ணப்படுகிறதோ?
நடப்பதெல்லாம் பார்க்கையில்
நம்பிக்கையின்றியே நகர்கிறது நாட்கள்..
 
சமூகநீதி பட்டத்தினை நூல்கள் கட்டுப்படுத்த...!
என்று அறுந்துவிழுமோ?
புரிதல் இல்லாமலேயே
ஆண்டபரம்பரையென்ற மிதப்பில்
அடிமையென்பதை மறந்துகிடக்குது ஒரு கூட்டம்...
 
மதத்தைப் பற்றிக்கொண்டு
கடவுளைத் தேடும் ஒரு கூட்டம்...
அன்பின் பாதையில்
மனிதத்தைத் தேடும் ஒரு கூட்டம்...
 
போதையூட்டும் மதத்தை விட
அன்பின் பாதையில் சிலுவைகள் அதிகம்..
அதனால் தானோ என்னவோ
வழிகள் எங்கும் அன்பை சுமப்பவருக்காக
காத்துக்கொண்டே இருக்கிறது...
யாருமற்ற சிலுவைகள்
 

#சங்கர்_நீதிமாணிக்கம்

கருத்துகள் இல்லை: