பனிக்காட்டு வனாந்திரத்தில்
உறைந்து கிடைக்கும் ஏரியில்
உடைந்து கிடக்கிறது
படகுக்குழாம்...
உனக்கான காத்திருப்பில்
பனிக்காற்றின் ஊதலோ
தனிமையின் வேதலோ
ஏதுமின்றி
தவமிருக்கிறது மனம்...
உன் நினைவுகளே
மௌனத்தின் வேர்களில்
என் உயிர் துடிக்க வைக்கும்
மறைச் சொல்லின் வரிகளாய்
மெல்ல ஒலிக்கிறது...
#சங்கர்_நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக