கடவுள் இருக்கிறாரா?
அட...இல்லாமலா...?
கண்டவர் எல்லாம்...கடவுளைக் கண்டவரில்லை(ஏளனத்தில்) கண்டவரெல்லாம்...கடவுளைப் படைத்தும்கடவுளைப் போற்றியும்கடவுளைத் தூற்றியும்கடவுளை வணங்கியும் வாழ்கிறார்கள்...அது சரி..நெருப்பில்லாமல் புகையுமா?
நானும் கடவுளைத் தேடிகொஞ்சம் பயணித்தேன்... அம்மா..என்றொரு அழுகுரல்..அணைக்க ஆளில்லைஅன்னமிட ஒருவருமில்லைஅநாதையாய் நின்றது ஒரு குழந்தைஅக்குழந்தை சுற்றித் திரிந்த வீதியில்
எல்லாம்கோவிலில் சொகுசாய் அமரவைத்துபூட்டப்பட்டிருந்த கடவுள்தனக்கு சாற்றப்பட்ட பூமாலையில் மூச்சு
முட்டதற்கொலை செய்து கொண்டார்.. படைத்தவன் படைத்தான்அழகாய் பெண்களைஆணவத்தில் ஆண்களை அவனைப் போலவே...அவளுக்கு ஆடையில் குறையில்லைஇவனுக்கோ பார்வையில் குறைவுஆதிக்க வெறிகொண்டுவன்புணர்ச்சி செய்து தூக்கி
எறிந்துவிட்டுஅவள் உள்ளத்தையும் எரித்துவிட்டுகோவிலில் பாவமன்னிப்பு கேட்ட பொழுதில்மீண்டும் ஒருமுறைகடவுள் தற்கொலை செய்துகொண்டார்.. என்னைப்போலவே உன்னைப் படைத்தேன்என்று இறைவன் சொன்னதாய்ஏட்டில் எழுதிவைத்தார்..ஆனால்நிற பேதம் ஏதுமில்லை..இன பேதம் ஏதுமில்லை..சாதி பேதம் ஏதுமில்லை..சகலரும் ஒன்றேஎன்று ஆணி அடித்தாற்போல்சொல்ல மறந்தானோ?
உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்றுஅவன் முன்னே ஒதுக்கியது கண்டுமற்றுமொருமுறைகடவுள் தற்கொலை செய்துகொண்டார்... மெல்லக் கடந்து செல்கையில்ஐயா... பசி...ஈனமாய் ஒலித்தது ஒரு குரல்ஆய்ந்து ஓய்ந்து உலகு விடும் வயதில்முதியவர் ஒருவர்..கடவுளிடம் கேட்க முடியாமல்மனிதன் முன் கை நீட்டி நிற்க..பார்த்துக்கொண்டிருந்த கடவுள்பட்டென்று தற்கொலை செய்து கொண்டார்... உங்களுக்கு ஒரு ஐயம் எழலாம்..எத்தனைக் கடவுள்கள் இங்குண்டு?
எத்தனை முறை அவர் தற்கொலை செய்வார்?
எனக்கு அந்த ஐயம் இல்லைஇல்லவே இல்லை.. அண்டவெளி தன்னில்ஒரு பால்வெளியில்உள்ளடங்கி இருக்கிறது பூமி..ஒரே ஒரு பூமிக்கு இருப்பதுஒரே ஒரு வானம்..எனில் படைத்தவன் பலவாகஎப்படி இருக்கமுடியும்?..
யாரும் கேள்வி கேட்கவில்லை.. கற்பனை கோடிட்டுவானம் பிரித்தான்பூமி பிரிந்தான்..கடல் பிரித்தான்காடு பிரித்தான்...சுடு...காட்டையும் பிரிந்தான்தன்னல மனிதன்..இந்த வையகத்தில் இருக்கும்ஒரே ஒரு தன்னல உயிரிநாம் தானே.. பிரித்தஒவ்வொரு இடத்துக்கும்ஒவ்வொரு தேவைக்கும்ஒவ்வொரு வேளைக்கும்தன் விருப்பம் போல ஆட்டிப்படைக்கஎன்ன செய்யலாம் என்று நினைத்தவனுக்குவந்து வாய்த்தது தான்அந்த அற்ப போதை...அட.. மதத்தைத் தான் சொல்லுகிறேன்
தோழர்களே.. ஒருவனுக்கு ஒரு மதம் பிடித்தால்..ஒரு கடவுள் போதுமா?
திசைக்கொரு கடவுள்மொழிக்கொரு கடவுள்..இனத்திற்கொரு கடவுள்..அவன் மனம் எண்ணும் போதெல்லாம்படைத்தான் எண்ணிலடங்கா கடவுள்கள்.. அதில் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்டுசிலுவையில் அறையப்பட்டார்..ஒருவர் தவறுதலாகஅம்பெய்திக் கொல்லப்பட்டார்..ஒருவர் விதி நொந்துதற்கொலை செய்துகொண்டார்.. இன்றைக்கும் கடவுள் இருக்கிறார்மரணமில்லாக் கடவுள்அவர் மரணித்துக்கொண்டே இருக்கிறார்..மதமெனும் சிறையில் இருந்துமீளவே முடியாமல்.. #சங்கர்_நீதிமாணிக்கம்
எதோ ஒரு நாளில்எதோ ஒரு இடத்தில்அறிமுகமானார்அறிமுகமில்லாத அந்த மனிதர்.. மெல்ல பேசிக்கொண்டதில்உலகத்து உயிர்கள் தன் படைப்பென்றார்தான் நினைப்பதே இவ்வுலகில் நடக்குமென்றார்இவ்வுலகத்தில் இருப்பவனவற்றில் எல்லாம்உயர்ந்தது நானேயென்றார்... எதோ ஒரு இறுமாப்புஎதோ ஒரு தற்பெருமைஉன்னால் என்ன முடியும் என்ற இளக்காரம்... பார்த்துக்கொண்டும்பேசிக்கொண்டும் இருந்தான் அவன்அந்த மனிதனோ சளைக்கவில்லை...தன் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போக... பொறுமையிழந்த அவன் கேட்டான்..நீங்கள் யாரென்று...நான் தான் கடவுள் என்றார் அந்த மனிதர்.. மெல்லச் சிரித்த அவன் சொன்னான்...உலகத்தை படைத்தது நீரென்றால்இந்த உலகத்தில் உம்மைப் படைத்தது நான்தானே..பிறகெப்படி நீர் என்னை விட உயர்ந்தவர் என்றான்.. நீண்ட விவாத்தில்ஒருவருக்கொருவர் சளைக்காத நிலையில்அவன் சொன்னான்..கடவுளே..பொறுத்தருள்க...உம்மை மதச்சிறையில் அடைக்கிறேன்...முடிந்தால் மீண்டு விடுதலை பெறுங்கள் என்றான்...தோல்வியில் அமைதியானார் கடவுள்.. #சங்கர்_நீதிமாணிக்கம்
சொற்கள் சேராத இடங்களில்மோதிக்கொண்டிருக்கிறதுஎண்ணத்தின் சிதறல்கள்...வாஞ்சையுடன்முகம்பார்த்துசொல்லொன்றுஇடிந்த இதயத்தின்வலி நீக்கஇதமாக வருமோ...?
ஏங்கி எதிர்பார்த்த வேளையில்எல்லாம் பொய்யென்று ஆனது...!இவ்வுலகம் காலடியில்புதைந்தே போனது...! #சங்கர்_நீதிமாணிக்கம்
ஏதோ ஒரு நாளில்மரங்களில் இருந்துஉதிர்ந்து விழுகிறது இலைகள்வானில் இருந்துமண்ணில் விழுகிறது மழைகண்ணில் இருந்துகொட்டுகிறது கண்ணீர்த் துளிகரை தாண்டி பாய்கிறதுதாலாட்டும் கடலலைஏதோ ஒரு நாளில் தான்நீயும்பூக்களாய்த் தூவுகிறாய்உன் புன்னகையை....அந்த நாளில்நான் எனோ இருப்பதில்லை #சங்கர்_நீதிமாணிக்கம்
இறகு விரித்த வண்ணத்துப்பூச்சிநீயென வியந்து நின்றேன்மலர்ந்த நறுமலர்நீயென மயங்கி நின்றேன்ஆடும் மயில்நீயென அசந்து நின்றேன்இசைக்கும் குயில்நீயென கிறங்கி நின்றேன்இதயம் தொட்ட உன்னழகை கவிதையாக்கிகாலடி நின்றேன்சொல்லாத உன் மவுனம்மெல்லத்தான்கொல்லாமல் கொல்லுதேஇவ்வுலகை... #சங்கர்_நீதிமாணிக்கம்
மௌன விழிகளால்மயக்கும் உன் சொற்கள்மெல்லஎன் காதுகளை வருடிச்செல்லபிரியாதஉன் இதழ்களில் இருந்துமெல்லப் பெயர்ந்து விழுந்ததுஊமைக் கனவுகள்...நூலருந்த பட்டமாய்தடம் மாறி பறக்கிறதுசிறகொடிந்த என் மனம்... #சங்கர்_நீதிமாணிக்கம்
எல்லா திசைகளிலும்எதிரொலித்துக்கொண்டேஇருக்கிறதுயாரும் கேட்காதஎன் மௌனத்தின்கூக்குரல்...ஊமையாகிக்கிடக்கிறதுஉலகத்தின் காதுகள்...உறங்கிக்கிடக்கிறதுஊருக்காக ஓலமிடும் மனம்...ஒதுங்கிக்கிடக்கிறதுஒன்று கூட முடியாததிசைகள்...உன்னைப்போலவே... #சங்கர்_நீதிமாணிக்கம்
உணர்வுகளின் மொழியில்இலை உதிர்ந்த மரத்தினடியில்நிழலில்லா நேரத்திலும்உன்னால் உட்கார்ந்துஎதைப்படிக்க முடிகிறது...?
காலம் செதுக்கி துப்பியவாழ்க்கையின் மிச்சத்தில்எதைக் கொண்டுஇனி வாழ்வது...?
எந்தப்புத்தகம்பாடம் சொல்லிக்கொடுக்கும்...?
#சங்கர்_நீதிமாணிக்கம்
நீ சிரிந்தால்என் முகத்தில் புன்னகை...நீ அழுகையில்என் முகத்தில் வருத்தம்...நீ கோபப்பட்டால்என் முகத்தில் கோபக்கனல்...நீ பொய் சொன்னால்என் முகத்தில் ஏமாற்றம்...உன் முன்னால்நான் கண்ணாடி என்பதுஉனக்கு எப்போது புரியும்...?
#சங்கர்_நீதிமாணிக்கம்
உனக்கான காத்திருப்பில்பனிக்காட்டு வனாந்திரத்தில்உறைந்து கிடைக்கும் ஏரியில்உடைந்து கிடக்கிறதுபடகுக்குழாம்...உனக்கான காத்திருப்பில்பனிக்காற்றின் ஊதலோதனிமையின் வேதலோஏதுமின்றிதவமிருக்கிறது மனம்...உன் நினைவுகளேமௌனத்தின் வேர்களில்என் உயிர் துடிக்க வைக்கும்மறைச் சொல்லின் வரிகளாய்மெல்ல ஒலிக்கிறது... #சங்கர்_நீதிமாணிக்கம்
மரத்தின் கிளையோடு பிணைந்திருந்தஒரு இலையைப் போலவேவாழ்க்கை..கால மாற்றத்தில்வசந்தங்கள் போய்மெல்ல வந்த கோடையைப் போலவாழ்க்கையின் எல்லையில் இருந்தமனிதனுக்கு...ஒரு இலை உதிர்வதைப் போலஇந்த மண்ணில் உதிர்ந்து விடுவதுஅவ்வளவு எளிதாக இருப்பதில்லை..
#சங்கர்_நீதிமாணிக்கம்
பிணைத்திருக்கும் சங்கிலியின்வலிமை அறியாத யானையாய்வாழ்வின் சிக்கல்கள்பெரிதென நினைத்துநகர முடியாது தேங்கிக் கிடந்ததுமனம்... தேங்கிக் கிடந்தபோதுமூடிக்கிடந்த பாதைதுணிந்து எடுத்துவைத்தமுதல் காலடியில்மெல்லத் திறந்து கொண்டது... #சங்கர்_நீதிமாணிக்கம்
எந்த போக்குகளும் சரியில்லைபோகும் பாதைகளும் சரியில்லைமுழுமைக்குள் சுழியமாய்நீண்டுகொண்டே இருக்கிறது பயணம்... மெல்லச் சிறகடிக்கும் பறவைகளையோமேனி தீண்டும் தூரல்களையோசிரித்துக் கடக்கும் மழலைகளையோபார்க்கமுடியா பாரத்தோடு தொடர்கிறது பயணம்... மனதில் நெருங்கி இருந்த உறவுகள்கைக்குள் அடங்கிப் போன உலகத்தில்அருகில் இருந்தாலும் அருகாமையாய் நினைத்துவிலகிக்கிடக்கும் உறவின் பயணம்... அடைபட்ட அறைக்குள் ஆளுக்கோர் அலைபேசிஉறவுகளைத்தேடி சமூக தளங்களில் தேடல்மாய உலகத்து மண்ணுக்குள்வாழ்வதை மறந்த பிழைக்கும் பயணம் எழுதித் தீர்த்த நாட்களும் போயினபேசித் தீர்த்த நாட்களும் போயினபார்த்தாலும் பார்க்காத புதிய நாட்களில்எந்திரத்தோடு கெஞ்சும் மனிதனின் பயணம்... யாரோ படைத்த பணத்தாலும்யாரோ படைத்த மதத்தாலும்வாய்விட்டு சிரிக்கமுடியாத வலிகளோடுநாளும் தொடர்கிறது இந்த மனிதனின் பயணம்... #சங்கர்_நீதிமாணிக்கம்
இவர்கள் சொல்லும் கலிகாலம் என்றாலும் சரி...அவர்கள் சொல்லும் மீட்பரின்வருகைக்காலம் என்றாலும் சரி...நிகழ்காலம் என்னவோபிழைப்பைத்தேடி நிலையில்லா ஓட்டத்தில்காலடியில் மிதிபடும் நெருக்கடியில்... இந்த உலகத்தின் நாட்கள் எண்ணப்படுகிறதோ?நடப்பதெல்லாம் பார்க்கையில்நம்பிக்கையின்றியே நகர்கிறது நாட்கள்.. சமூகநீதி பட்டத்தினை நூல்கள் கட்டுப்படுத்த...!என்று அறுந்துவிழுமோ?புரிதல் இல்லாமலேயேஆண்டபரம்பரையென்ற மிதப்பில்அடிமையென்பதை மறந்துகிடக்குது ஒரு கூட்டம்... மதத்தைப் பற்றிக்கொண்டுகடவுளைத் தேடும் ஒரு கூட்டம்...அன்பின் பாதையில்மனிதத்தைத் தேடும் ஒரு கூட்டம்... போதையூட்டும் மதத்தை விடஅன்பின் பாதையில் சிலுவைகள் அதிகம்..அதனால் தானோ என்னவோவழிகள் எங்கும் அன்பை சுமப்பவருக்காககாத்துக்கொண்டே இருக்கிறது...யாருமற்ற சிலுவைகள் #சங்கர்_நீதிமாணிக்கம்