எழுட்சி மனம் கொண்டவனின்
கைகளில்
புரட்சிமை ஊற்றிய எழுதுகோல்..
அங்கே வெற்றுக்காகிதம் எல்லாம்
ஒரு வரலாற்று காவியமாய்...
கள்ளுண்ட மனம்..
காதல்
கள்ளுண்ட மனம் கொண்டவனின்
இள”மை”யூற்றிய எழதுகோல்
தினம் தினம் படைத்திடும் எழுத்தெல்லாம்
காதலின் காவியமானதே..
சில கிறுக்கல்களும்
அந்த வெற்றுக்காகிதத்தில் கோடுகள்
போடலாம்
சில நேரங்களில்
காவியமாகும் அதிசயமும் கண்கூடு..
காலங்கள் புரட்டிப்போட்ட
வரலாறுகளாய்
வெற்றுக்காகிதங்கள்
என்றென்றும் வெற்றாகி போவதுமுண்டு..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக