.
.
ஒருநாள் திருவிழாவில்
உரிமைகள் விரல் நுனி மையில்
உருவிக்கொள்ளப்பட்டது...
நமது ஏக்கத்தின் கூப்பாடு
எவர் காதிலும் விழுவதில்லை
மக்களாட்சி தூண்களோ
சட்டத்தின் ஓட்டையில் ஒளிந்து
கொள்கிறது
எளிய மக்களின் எண்ணங்கள்
கவனிப்பாராற்று
நான்காம் தூண்களோ
பணநாயகத்தின் கால்களிடையே
காத்துக்கிடக்கிறது
கிடைக்கும் எலும்பு துண்டுக்காய்
வீதியில் இறங்கமாட்டார்கள் என்பதும்
பொய்யாகி போனதும்
அறிந்திருத்தும் அடங்கா கொட்டம்..
அடங்குவார்களா????
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக