காதல் நல்ல அழகு ரோஜா தான்
காதல் சொல்லுவதும் அழகா?
அது இதயத்தின் துடிப்பை
வார்த்தைகளில் உடைத்தெறியும் இன்ப
வலி..!
சொல்ல நினைக்கையில் குழறும் நாவும்
எண்ணி நினைவினில் மருகும் மனமும்..
இன்பம் கூட்டும் துன்ப நேரங்கள் அது..
கடைக்கண்ணின் பார்வையிலே
பாய்ந்து வரும் மன்மதனின் அன்பு..
குழலோசைதான் காதலில்
சொல்லாத வார்த்தைகளும்
ம்ம்ம்ம்.. என்ற வார்த்தைகளே
இரு உதடும் உச்சரிக்கும் அதிகபட்ச சொல்லோவியம்..
கொஞ்சும் விழிகளும் கூடவே வழியும்
மொழிகளும்..
காதல்....! காதல் தான்..
எழுத்துக்கொண்டு விளையாட அது
கவிஞனாக்கும்
அமைதி கொண்டு பார்த்திருக்க அது
ஞானியாகும்..
தனிமையிலே நினைத்திருக்க அது
சித்தனாக்கும்
நினைவினிலே சிரித்திருக்க அது
பித்தனாக்கும்..
காதல் உள்ளங்களில் கூட்டா?
ஒரு உள்ளத்தில் வருவதும் காதல் தானே..
நினைவுகளில் நீந்தி திளைப்பதும் காதல்
தானே..
விழி மூடி யோசிக்கையில் எல்லாம்
மின்சார அதிர்வலையாய் இனிமை பாய்கையிலே..
ஆதியோ அந்தமோ..
பிறப்போ இறப்போ....
என்ன செய்துவிட முடியும் இந்த
காதலிடம்..
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக