ஜீ பூம்பா..
சொல்லுங்கள் ஆலம்பனா...
என் சித்தம் கலக்கும்
சொல்லொண்ணா துயரம் தரும்
கடன் சுமை நீங்கி சிரித்து மகிழ
கொஞ்சம் பணம் வேண்டுமே...
முடிக்கும் முன் அடுக்கியது
புத்தம்புது கட்டுக்கள்..
என்னவள் பெண்ணவள் நல்லவள்
அவள் தேகம் அலங்கரிக்க கொஞ்சம்
அணிகள்..
முடிக்கும் முன்னே
நகைக்கடை பரப்பியது என் முன்னே..
வறண்டு கிடக்குது பூமி..
வற்றிக் கிடக்குது ஆறு..
உயிர் தர வேண்டுமே.. உதவுவாயா?
மழைமேகம் கூட்டும் மரக்காடுகளை
எங்கும் நட்டு செழிக்க செய்தது..
உழைத்து களைத்து இருக்கின்றனர்
மக்கள்..
கொஞ்சம் இளைப்பாற..
கொஞ்சம் சோர்வு நீங்க..
கொஞ்சம் இன்புற்றிருக்க...
என்ன செய்வாய் ஜீபூம்பா...?
வண்ணக்காட்சிகளும் வகையான உணவுகளும்
எண்ணத்தில் மகிழ களிப்பூட்டும் நடனமும்
காட்சி படுத்தியது..
நல்லது ஜீபூம்பா..
எங்கும் கையூட்டு எங்கும் ஊழல்..
எங்கும் சுயநலம்..! மறைந்தது பொதுநலம்..!
நீயா... நானா? போட்டியில்
மறக்கப்பட்டனர் மக்கள்..
சுத்தம் செய்யவேண்டுமே..! என்ன
செய்வாய்...?
ஐயகோ...என்ன செய்வேன்..
சடுதியில் காணமல் போய்விட்டதே..
இந்த ஜீபூம்பா...
சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக