இது நமக்கு மட்டும்
பொன்னிற கதிர்களால்
பூமி அணைக்கும் கதிரவனும்...
பசுமைகொண்ட காடுகளால்
வெம்மை தணிக்கும் பூமியும்..
பூத்துக்குலுங்கும்
மரங்களும்..
புத்துணர்ச்சி மணம்
தரும் பூக்களும்..
நம்மை அணைக்கும் இயற்கையும்
நமக்கு மட்டுமே..
மனம்விட்டு சிரிக்க
வரும்
கண்ணீரும்..
மனம் கசிந்து அழ வரும்
கண்ணீரும்..
நமக்கு மட்டுமே..
பாசம் கொண்ட நெஞ்சம்
பலவும்..
துரோகம் கொண்ட நெஞ்சம்
சிலவும்..
நேசம் கொண்ட உள்ளம்
பலவும்..
வேசம் கொண்ட உள்ளம்
சிலவும்
நமக்கு மட்டுமே...
நேசிப்பதாய் முகத்தில்
காட்டி
மனதில் தூசிக்கும்
துர்க்குணமும்
நமக்கு மட்டுமே....
இதைவிட அது..
அதைவிட இது..
என்று ஒன்றைவிட்டு
ஒன்று தாவி
ஒவ்வொன்றாய் தேடும்
குரங்கு மனமும்..
நமக்கு மட்டுமே..
நினைத்து நினைத்து
உருகவும்..
பார்த்து பார்த்து
ரசிக்கவும்..
என்றும் மனதில் நினைத்து
வாழவும்
தெரிந்த அன்பு மனமும்
நமக்கு மட்டுமே..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக