சனி, 2 ஜனவரி, 2016

பழக்கங்களுக்கோ, பொருளுக்கோ அடிமையாகாதிருங்கள்


நீங்கள் விரும்பும் ஒரு பொருளுக்கு நீங்கள் முதலாளியா.. இல்லை நீங்கள் விரும்பும் அந்த ஒரு பொருள் உங்கள் முதலாளியா?
ஒரு பொருள் நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்களுக்கு கிடைக்காதபோது உங்களை அந்த நிகழ்வு தொந்தரவு செய்கிறது என்றால் அந்த பொருள் உங்கள் முதலாளியாய் மாறிவிட்டது என்று அர்த்தம். உங்களுடைய எண்ணங்கள் எதன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதோ, அதன் கட்டுப்பாட்டிலேயே உங்கள் மனஅமைதி இருக்கிறது. உங்களுக்கு வெளியில் எவ்வளவு முதலாளிகள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு குறைந்த மனஅமைதியோடு நீங்கள் இருப்பீர்கள். உங்கள் மனஅமைதி கெடுக்கும் எந்த பழக்கமும் தவறானவையே...

காபி, டீ போன்ற பானம் அருந்துவது, அலைபேசி, இணையத்தொடர்பு இப்படி எதுவாகிலும் சரி.. எல்லாவற்றையும் உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நீங்கள் அவை அனைத்திற்கும் முதலாளியாய் இருங்கள். எந்த பொருளுளையும், எந்த செயளையும் உங்களுக்கு முதலாளியாக மாற விடாதீர்கள். 

கருத்துகள் இல்லை: