வெள்ளி, 31 ஜூலை, 2015

வாழ்க்கையில் priority - அன்றும், இன்றும் - விளைவும்...!

1975

இரவு 7 மணிக்கு அப்பா அபீஸிலிருந்து வருகிறார். எல்லோரும் சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு வெளியில் காற்றாட அமர்கிறார்கள்... அப்பா சேரில், அம்மா பிள்ளைகள் வாசப்படியில்...
அம்மா: “சின்னவன் ஸ்கூல்லேந்து வந்ததுலேந்து ஒரு மாதிரி இருக்கான்..”
அப்பா சின்ன பையனைப் பார்த்து : “என்னடா.. என்னாச்சு..?”
பெரியவன்: “ஹோம் ஒர்க் போட்லன்னு ஜியாக்ரபி மாஸ்டர்ட்ட பிரம்படி வாங்கியிருக்கான்பா.... கைய காட்ரா..!”
அப்பா: “ரொம்ப வலிக்குதா..? ஆயின்மென்ட் போட்டுக்கிறியா..?”
சின்னவன் “அம்மா போட்டாங்கப்பா...!”
அப்பா: “டீச்சர்ட்ட அடி வாங்கறதெல்லாம் சகஜம்பா.. ! இப்ப எவ்ளோ பரவாயில்லையே.. உங்கள கையிலதான் அடிக்கிறாங்க.. அப்பல்லாம்.. எங்களையெல்லாம், வாத்தியார் ட்ராயர இறக்க சொல்லி சூத்தாமட்டையிலேயே அடிப்பாரு...!”
எல்லோரோடு சின்னவனும் தன் வலியை மறந்து சிரிக்கிறான்..!
அப்பா: “இது எத்தனாவது தடவை நீ ஹோம் ஒர்க் பண்ணாம போறது..?”
“நா...லு...... இல்ல.. அஞ்சாவது தடவை...”
அப்பா: “அதான்....! வாத்தியார் உன்ன அடிக்கிறாருன்ன அதுக்கு காரணம் நீ கண்டினியுஸா தப்பு பண்றேன்னு அர்த்தம்...! அவரு சொல்றத நீ கரெக்ட்டா செஞ்சுட்டீனா, நீ சின்ன தப்பு செஞ்சாலும் அடிக்க மாட்டாரு... புரியிதா..?”
பையனுக்கு அப்பா சொல்வதில் உள்ள நிஜம் புரிந்தது.. இனி அடி வாங்காமல் இருக்க வழி தெரிந்தது... அவன் மனம் லேசானது....
2012
அப்பா இரவு 10.30 மணிக்கு ஆபீளிலிருந்து தன் டூப்ளே அபார்ட்மெண்ட் வீட்டுக்கு வருகிறார்..
சீரியல் பார்த்துக் கொண்டே, அம்மா: “விகாஷ் இன்னிக்கு ஸ்கூல்லேந்து வரபோதே என்னமோ மாதிரி வந்தான்..! கேட்டா எரிஞ்சு விழறான்... அப்போ ரூமுக்குள்ள போனவன்தான்... சாப்பாடு வேணாங்கறான்.. மேல போய் என்னன்னு கேளுங்க.!“
அதற்குள் அப்பாவிற்கு மொபைலில் கால் வருகிறது..
அப்பா: “ஓ மை காட்..! ஒரு கான்ஃப்ரன்ஸ் கால் இருக்கு இப்போ..! மறந்தே போயிட்டேன்...! ஷிட்.. ஒரு மணி நேரம் ஆகும்..! விகாஷோட நாளைக்கு பேசலாம்.. தூங்கட்டும் விடு...!”
விகாஷ் அன்றிரவு தூங்காமல்தான் படுத்துக் கொண்டிருந்தான்.. அவன் பிரச்சனை பேசப்படவேயில்லை, அவன் drug addict ஆகி ஒரு நாள் டீச்சரை கத்தியால் குத்தும் வரை....


கருத்துகள் இல்லை: