வியாழன், 23 ஜூலை, 2015

மணவாழ்க்கை - தெரிந்துகொள்ள, புரிந்துகொள்ள சில உபயோகமான தகவல்கள்



1. நாம் வாழ்க்கையில், வேலை செய்யும் ஆபீஸ் மற்றும் எத்தனையோ இடங்களில் – சாலையில்; நண்பரகளிடம்; கவர்மெண்ட் ஆபீஸ்களில், வெளிநாடுகளில் பயணிக்கும் போது, etc., என - பல compromises, சமரசங்கள் செய்து கொள்கிறோம்..! 
ஆபீஸில் நம் பாஸ், கலீக்ஸை என்னதான் பிடிக்கவில்லை என்றாலும் குறைந்த பட்சம் அந்த கம்பெனியில் 2 or 3 வருடங்களாவது இருக்க வேண்டும் என்றுதானே compromises செய்து கொள்கிறோம்..? அதென்ன மணவாழ்க்கை என்னும் முக்கியமான விஷயத்தில் 6 மாதம் கூட compromise செய்து கொள்ள முடியவில்லை..?
2. ஆண், பெண் உறவுகளில், compromise செய்து கொள்வதில் ஒருவருக்கு தயக்கம் இல்லையென்றாலும், ‘அதென்ன ' நீ' compromise செய்து கொள்ளாமல் இருப்பது..?’ எனும் ஈகோவில்தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது..! பகவான் கன்ணன் சிசுபாலனின் தாயிடம், “நான் அவன் 100 தவறு செய்ய அனுமதிப்பேன்..” என்று சொன்னதைப் போல ஒருவர் அடுத்தவருக்கு குறிப்பிட்ட அளவு time leverage கொடுத்து அதுவரையில் reciprocation எதிர்பார்க்காமல் காம்ப்ரமைஸ் செய்யலாமே..? ஆனால், அது மனதிற்குள் இருக்க வேண்டும்... ! வெளியே சொன்னால், ஈகோவில், “இநதா எண்ணிக்கோ” என்று அடுத்தவர், வேண்டுமென்றே கடுப்பேற்றலாம்..!
3. யார் நோய், யார் மருந்து என்பதை analyse செய்து, மணவாழ்க்கையில், ஆண் நோயென்றும், பெண் மருந்தென்றும் நம் முன்னோர்கள் வரயறுத்து வைத்தார்கள். காலத்தின் மாற்றத்தில் இப்போது ஆண், பெண் இருவருமே நோய்தான்...! (பெண்கள் மத்தியில் “Why compromise, even if mutual ..?” என்று ஒரு எண்ணம் தீவிரமாக பரவுகிறதோ..?. Male Chauvinism போல் இப்போது Female Chauvinism வந்து விட்டதோ..?)
4. இப்போது, மணவாழ்க்கைக்கு மூன்று வழிகள் or படிகள் உண்டு:
a. ஆண்-பெண், ஒருவருக்கொருவர் மருந்தாக இருக்கலாம் or
b. ஒருவரின் நோயை இன்னொருவர் இன்னும் கூட்டாமல், decent space கொடுத்து வாழலாம் or
c. ஒருவருடைய நோயை இன்னொருவர் தன் நோயால் (குணத்தால்) கூட்டி அல்லல் அதிகமாகி விடலாம்.
மூன்றாவது நடக்கும்போதுதான் மண வாழ்க்கை கசக்கிறது..!
3ம் படியில் இருப்பவர்கள், பிரச்சனை புரிந்து, முயற்சித்து, இரண்டாம் படிக்கு செல்ல வேண்டும். அந்த புரிதல், முயற்சி நடக்காமலே பல திருமணங்கள் முறிகின்றன...!
5. Compromises இல்லாத மண வாழ்க்கை என்பது, ‘டைனோசர்’ போல் சுத்தமாய் மறைந்து போன ஒன்று..! மணவாழ்க்கை என்பதற்கு இனி அர்த்தம்: ‘co-existence with lot of compromises and mutual understanding’. இதில் தெளிவில்லாதவர்கள்- ஆண்கள or பெண்கள் - கல்யாணம் செய்து கொள்ளும் முன் தீர யோசிக்க வேண்டும்..!

கருத்துகள் இல்லை: