வெள்ளி, 31 ஜூலை, 2015

Job இன்டெர்வியுவில் நீ, நீயாய் இருந்தால் வெற்றி...!



Job இன்டர்வியு ஆரம்பித்தது.. (ஆங்கிலத்தில், இங்கே தமிழாக்கம்)
நான் முதல் கேள்வியைக் கேட்டேன்...
அவன் உடனே, தயக்கம் எதுவும் இல்லாமல், சரியான பதில் கூறினான்..!
அடுத்த கேள்வியைக் கேட்டேன்....
அவன் யோசிக்க கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டான். ஆனாலும், பதில் சொல்லும்போது எந்த பிசிறும் இல்லாமல் தெளிவாக பதில் கூறினான்..!
அடுத்த கேள்வி..
அவன்: “சர், நான் சொல்லப் போகும் பதில் 100% சரிதானா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு..! ஆனாலும், பதிலைச் சொல்லி அது தவறென்றால், சரியான பதிலை உங்களிடமிருந்து தெரிந்து கொள்ள ஆசை..! ..சொல்லலாமா...?
நான் அனுமதித்தேன். அவன் பதிலைக் கூறினான். அது 90% சரியாக இருந்தது...! பதிலில், எந்தப் பகுதி அவனுக்கு தெரியவில்லை என்பதையும் சொல்லும் போதே குறிப்பிட்டான்..!
அடுத்து ஒரு கடினமான கேள்வி.. குறிப்பிட்ட விஷயத்தில் அனுபவம் உள்ளவர் மட்டுமே அதற்கு பதிலளிக்க முடியும்...!
அவன் எந்த யோசனையையும் செய்யாமல் “சர், எனக்கு அந்த விஷயத்தில் தியரிட்ட்கல் நாலட்ஜ்தான் உண்டு..! அதில் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.. செய்ய எனக்கு ரொம்பவே ஆவல்..! எனக்கு தெரிந்த தியரிட்டிகல் நாலட்ஜை வைத்து பதில் சொல்லலாமா..?” சுருக்கமாய், ஓரளவு சரியான பதில் சொன்னான்.
கடைசி கேள்வியாய் நான் அவனைக் கேட்டேன்: “உன்னிடம் இருக்கும் எந்த ஒரு குணாம்சம் (virtue) இந்த வேலையில் நீ பரிமளிக்க உதவும் என்று நினக்கிறாய்..?”
அவன் என்னைப் பார்த்து மெல்லியதாய் சிரித்து: “சர், நான் ஒரு 30 செகண்ட் யோசிக்க எடுத்துக் கொள்ளலாமா..?”
“ஓகே….”
அவன் இரு கைகளையும் மடித்துக் கொண்டு யோசிக்கத் தொடங்கினான்... அந்தக் கணம், அவனுக்கு அந்த அறையும் அங்கு இருக்கும் மற்றவரும் மறந்து விட்டது போல், தனக்குள் மூழ்கினான்..!. சில வினாடிகளில் அவன் முகத்தில், விடையின் தெளிவு பிறப்பது தெரிந்தது..!
கைகளை விடுவித்துக் கொண்டு, சரியாக உட்கார்ந்து கொண்டு, புன்னகையுடன் அவன்: “நேரம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி ஸர்..! இப்போது நான் பதிலைச் சொல்லட்டுமா..?”
நான்: “அவசியம் இல்லையப்பா..! நீ போய் HRரை பார்க்கவும்.. யு ஆர் செலக்டட்..!”


கருத்துகள் இல்லை: