திங்கள், 27 ஜூலை, 2015

சோமசுந்தர_பாரதியார்_அறிவோம்


பதிவு #கவி_தா ‏@kavitha129

#சோமசுந்தரபாரதியார் அறிந்துள்ளோர் எத்தனை பேர்?
இருவருக்குமுள்ள தொடர்பு என்னவென்று அறிந்தோர் எத்தனை பேர்?

இன்றைக்கு(ஜூலை 27) 136 ஆண்டுகளுக்கு முன்னர் (1879ல்) எட்டையபுரத்தில் பிறந்தவர்

தந்தைக்கு எட்டையபுர அரண்மனையில் வேலை என்பதால் கிட்டத்தட்ட எட்டையபுர அரண்மனையிலேயே வளர்ந்தார்.

அரண்மணையில் பணியாற்றி வந்த சின்னசாமி ஐயரின் மகன் சுப்பிரமணியனும், அரண்மனையில் வளர்ந்து வந்த சோமசுந்தரமும் சிறு வயது முதலே நல்ல நண்பர்கள்.

தமிழ் மீதான ஆர்வமே இருவரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் இணைப் பறவைகளாய் சுற்றி வந்தனர்.

எட்டையபுரம் அரண்மனைக்கு வருகை தரும் தமிழ்ப் புலவர்களின் பாடல் கேட்டு பா புனையும் ஆற்றலை இருவரும் பெற்றிருந்தனர்

ஒரு முறை யாழ்பாணத்திலிருந்து புலவர் ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவர் இருவரிடமும் சென்று ஈற்றடி கூறி, பாடலொன்றை இயற்றித் தருமாறு வேண்டினார்.

இருவரும் எழுதுகோல் பிடித்து உடனடியாக அந்த ஈற்றடிக்கு பாடல் தந்தனர். அதனைப் படித்துப் பார்த்த யாழ்ப்பாணப் புலவர் மெய்சிலிர்த்தார்

''அருமைப்பாடல்’’ எனக்கூறி இருவருக்கும் #பாரதி பட்டம் வழங்கிச் சிறப்பித்தார்.

அன்று முதல் சோமசுந்தரம் #சோமசுந்தரபாரதி என்றும், சுப்பிரமணியன் #சுப்பிரமணியபாரதி என்றும் அழைக்கப்பட்டனர்.

#சோமசுந்தரபாரதி வழக்கறிஞராகத்தான் வாழ்க்கை ஆரம்பித்தார்.
வ.உ.சி.யுடனான நட்பு அரசியலுக்கு இவரை இழுத்து வந்தது

1933ஆம் ஆண்டு அண்ணா மலை அரசரின் வேண்டு கோளுக்கிணங்க வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியரானார்

அங்கு தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாகத் தமிழ்ப் பணியாற்றி வந்த காலத்தில்தான் 1937 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புத் ‘தீ’ கொழுந்து விட்டெரிந்தது.

29.08.1937ல திருநெல்வேலித்தமிழ்ப்பாதுகாப்பு சங்கத்தின்சார்பில் மா.வே.நெல்லையப்யப் பிள்ளையும் இந்தித்திணிப்பைக்கண்டித்து முதல்குரல்எழுப்பினர்

அதன் பிறகு இந்தித் திணிப்பிற்கு எதிரான குரலை சென்னையில் தொடங்கி வைத்த பெருமை சோமசுந்தர பாரதியாரையே சாரும்.

இதிலே வந்து கலந்து கொண்டவர்கள்தான் மற்ற தமிழ், சமூக ஆர்வலர்களும் ,அரசியல்வாதிகளும்!

#இந்திஎதிர்ப்புவாரியம் உருவாக்கினார்.
தலைவர் பாரதியார்
செயலாளர் கி.ஆ.பெ.விசுவநாதம்

உறுப்பினர்களாக...
ஈ.வெ.ரா., (கவனிக்க இவரே உறுப்பினர்தான்)
உமா மகேசுவரனார்,
ஊ.பு.சௌந்தர பாண்டியன்,
கே.எம். பால சுப்பிரமணியம்

நாள்தோறும் மறியல், நாள்தோறும் சிறை என்ற நிலைக்குப் போராட்டம் வளர்ந்தது.
தொடர் போராட்டங்கள் அரசைக் கலங்கடித்தன

1937ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போரில் சோமசுந்தரபாரதியார் ‘தமிழர் கழகம்’ எனும் அமைப்பை நிறுவினார்.

பெரியார் உருவாக்கிய ஆரியத்திற்கு எதிர்வகை குறியீட்டுச் சொல்லாகிய திராவிடத்தை சோமசுந்தரபாரதியார் ஒப்புக் கொள்ளவில்லை.

1942ஆம் ஆண்டு பெரியாரின் திசைமாறிப் போன ‘திராவிட நாடு திராவிடருக்கே’ முழக்கம் காதைப் பிளந்தது

“தமிழன் தன்னைத்தமிழனென்று கூறிக் கொள்ளவும் வெட்கப்பட்டுத் ‘திராவிடன்திராவிடன்’ என்று தோள் குலுக்குவதா? '' - #சோமசுந்தரபாரதி கேட்டாரே அப்பவே

''திராவிடன் என்றபெயர் சங்கநூலிலே ஏது?''
- #சோமசுந்தரபாரதி
(இன்னும்தான் கேட்கிறோம்...அதேதாஇது னு வாழைப்பழ காட்சியாக்கி விட்டனர்)

1950ஆம் ஆண்டு மேமாதம் 27, 28 நாட்களில் கோவையில் தி.மு.க. சார்பில் முத்தமிழ் வளர்ச்சிமாநாடு நடைபெற்றது
மாநாட்டுத் திறப்பாளராக #சோமசுந்தரபாரதி வைத்தார் ஒரு #கொட்டு

''இந்நாளில் பலர் திராவிடம், திராவிடர் என்றே சொல்லி வருகிறார்கள். தமிழ், தமிழர் என்று சொல்ல உங்கள் வாய் ஏன் கூசுகிறது?''

''தமிழ், தமிழர் என்றுசொல்ல வெட்கப்படுகிறவன் தமிழனாயிருக்க முடியுமா? அவன்இரத்தத்திலே எப்படி தமிழ் இரத்தம் ஓடும்?''
பதைபதைத்துப்போனார் #அண்ணா


இந்தி எதிர்ப்புப் போரின் முடிவில் இரண்டு கோரிக்கைகள் தமிழர்களிடத்தில் வலுப்பெற்று நின்றன.
1) மொழிவழித் தமிழ் மாகாணம்
2) தமிழ்நாடு தமிழருக்கே

இவ்விரண்டு கோரிக்கை உருவாக்கியது சோமசுந்தர பாரதியே தன் வாழ்நாளின் இறுதிவரை இக்கோரிக்கைகளின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.

தொல்காப்பியத்திற்கு உரை எழுதியவர் நச்சினார்கினியர். நச்சினார்கினியர் உமிழ்ந்த எச்சில் என்றால் அதை நக்கவா வேண்டும்? எனசாடியவர் சோமசுந்தரபாரதி

அண்ணா கம்பராமாயணத்தை எரிக்கும்முயற்சியில் ஈடுபட்டபோது அதை வன்மையாகக்கண்டித்தார்
''ஒரு சிறந்தகாவியத்தை எரிப்பது நல்லதல்ல.அது தமிழ்நெறியன்று''

''அருந்தமிழ் நூலை எரிப்பதால் ஆபாசக் கருத்தை எப்படி அழிக்க முடியும்?'' கேட்டவர் சோமசுந்தரபாரதி
அரசியலுக்கு அதெல்லாம் தெரியுமா என்ன??

திருவள்ளுவர்,தொல்காப்பியர் ஆகியோரைப் பற்றிப் புனையப்பட்ட பொய்க்கதைகளை தன்னுடைய ஆய்வுகளின் மூலம் தகர்த்தவர் #சோமசுந்தரபாரதியார்

அவரது ஆய்வு நூல்கள்
தசரதன் குறையும் கைகேயி நிறையும் (1926)
திருவள்ளுவர் (1929) -தமிழ், ஆங்கிலம்.
சேரர் தாயமுறை (1960) -தமிழ், ஆங்கிலம்
தமிழும் தமிழரும் சேரர் பேரூர் (தமிழ், ஆங்கிலம் )
அழகு பழந்தமிழ் நாடு (1955)
நற்றமிழ் (1957)
நிறையவே தனிச்செய்யுள்கள் இயற்றினாலும் படைப்பிலக்கியமாக...
^மங்கலக் குறிச்சிப் பொங்கல் நிகழ்ச்சி-ஒரு செய்யுட் கதை (1947)
^மாரி வாயில் (1936)

உரைநூல்..
தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை
அரசியல் நூல்..
”இந்தி” கட்டாய பாடமா?
வாழ்க்கை வரலாறு..
நான் கண்ட சுப்பிரமணிய பாரதி

தமிழ் நெறிப்படி வாழ்ந்து உயர்வோம்...
அவர் காட்டிய வழியில் ஆரியத்தை வீழ்த்தி...
திராவிடத்தைப் புறந்தள்ளி...!

தை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டு என்றும்
திருவள்ளுவர்திருநாள் என மாட்டுப்பொங்கல் அன்றும்
நாம்இன்றும் கொண்டாடக்காரணமிவரே

தமிழ்மொழி,தமிழினஅடையாளத்தை ஒருபோதும் விட்டுத்தரமறுத்தார் சோமசுந்தரபாரதி
(அதான் அவரையார் எனக்கேட்கும் நிலையில் அரசுகள்வைத்துள்ளன)




#தமிழ்வாழ்க
‪#‎படித்ததில்_பிடித்தது‬

கருத்துகள் இல்லை: