ஞாயிறு, 26 ஜூலை, 2015

ஓர் எழுத்து ஒரு சிந்தனை - கர்மா


"K for Karma"
How people treat you is their karma; how you react is yours.
Wayne Dyer
இந்து மதத்தின் இந்த கர்மா என்ற கான்செப்ட்டை மேற்கத்திய நாடுகள் மகிழ்ச்சியுடன் வரவேற்று ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த வார்த்தை அவர்களின் அகராதியிலும் இடம் பெற்று விட்டது. பூஜ்ஜியம் போல இந்த கர்மாவும் இந்தியாவால் உலகுக்கு அளிக்கப்பட்ட கொடை . நாம் செய்யும் செயல்கள், conscious or unconscious, ஏதோ ஒரு விதத்தில் நமக்கே திரும்பி வரும் என்ற கான்செப்ட் அவர்களுக்குப் புதியது. நியூட்டனின் மூன்றாம் விதி நம் வாழ்விலும் ஒரு முக்கியமான பங்கு வகிக்கும் என்பது fascinating .இங்கே இந்த கான்செப்ட் நமக்குப் புதியதல்ல. நியூட்டன் விதிக்கு எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்பே பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் என்ற குறள் எழுதி விட்டோம்.
சரி. இந்த கர்மா என்பது என்ன? யாரேனும் மேலே ஒரு குண்டு நோட் புக்கை வைத்துக் கொண்டு நாம் தினப்படி செய்யும் செயலை சின்ஸியராக குறித்து வைத்துக் கொண்டுள்ளார்களா? இன்று நீ காரில் செல்லும் போது பக்கத்தில் அப்பாவியாக ,மெதுவாக கார் ஓட்டிக் கொண்டிருந்தவனைப் பார்த்து நடுவிரலை காண்பித்தாய், எனவே உனக்கு அடுத்த ஜென்மத்தில் அந்த விரலில் நகச் சுற்று வரட்டும் என்று விதிக்கிரார்களா? ஆனால் Why wait till அடுத்த ஜென்மம்???அதில் நாம் இந்த ஜென்மத்தில் செய்தது ஞாபகம் இருக்காதே?
We are not punished for our sins; We are punished by our sins.பாவங்களால் தண்டனை. பாவங்களுக்காக தண்டனை அல்ல என்கிறார் ஓஷோ. ஏதோ ஒரு விதத்தில் கர்மாவே நம்மை தண்டித்து விடுகிறது. பேன்சி தொப்பி அணிந்த ஒரு record keeper தேவை இல்லை. தினை விதைத்தவன் தினை அறுப்பான்!
கர்மாவே நம்மை தண்டிக்கிறது. ஒருவரை கேலி செய்யும் போது , ஒருவரைப் பார்த்து பொறாமை கொள்ளும் போது , ஒருவரை அழிக்க நினைக்கும்போது ஏதோ ஒரு விதத்தில் அந்த எண்ணம் நம் அசேதனத்தில் தங்கி விடுகிறது. something not right ! ஏதோ ஒரு விதத்தில் அது நமக்கே திரும்பி வருகிறது, sooner or later !! இரவு முழுவதும் பார்ட்டி, நண்பர்களுடன் கூத்து, கலர் கலராக எல்லா திரவங்களையும் உள்ளே தள்ள வேண்டியது. மறுநாள் ஏதோ சரியாக இல்லை. உடல் எதிர்வினை காட்ட ஆரம்பித்து விடுகிறது. ஹேங் ஓவர் வந்து விடுகிறது. வாந்தி, தலை சுற்றல்...அதே இரவு முழுவதும் ஒரு சத் சங்கம், நல்ல இசை, நல்ல சொற்பொழிவு இவைகளைக் கேட்டிருந்தால் அடுத்த நாள் ஏதோ உள்ளகத்தில் something nice !!!
அடுத்தவரைப் பார்த்து விரலைக் காட்டும் போது சில வினாடிகளுக்கு இன்பம், பெருமிதம். பிறகு ஏதோ ஒரு சந்தர்பத்தில் கர்மா வெளிப்பட ஆரம்பிக்கிறது. ஏதோ ஒன்று உறுத்துகிறது.
அதே போல, விரலைக் காட்டாமல் சற்றே பொறுமையுடன் அவரைப் பார்த்து புன்னகைத்து வழி விட்டிருந்தால் அல்லது வழி கேட்டிருந்தால் கர்மா ஏதோ ஒரு விடத்தில் நம்மை reward செய்கிறது.
Like gravity, karma is so basic we often don't even notice it.
Sakyong Mipham

கருத்துகள் இல்லை: