யாரென்று தெரியாத
ஒருவனாய்
நான்..
நான் முகம் காட்டும்
கண்ணாடி..
உங்களின் செயல்களையே
பிரதிபலிக்கிறேன்..
நான் நிர்மலமான வானம்..
சூழ்நிலைகள்
மாற என்னுள்ளும்
இடி,
மின்னல் மேகமுண்டு..
நான்
அமைதியான ஆழ்கடல்.
அதிசயங்களும்,
அதிரகசியமும்
தூங்கும் எரிமலையும்
உண்டு..
நான் தெளிவான
நீரோடை..
அன்போடு
அள்ளிப்பருகலாம்
கலக்கினால்
என்னுள்ளும் அழுக்குண்டு..
நான் வெற்றுத்தாள்..
நீங்கள் எழுதுவதையே
நீங்கள்
படிப்பீர்கள்..
இன்னும்
யாரென்று தெரியாத
ஒருவனாய்
நான்..
--சங்கர்
நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக