நினைவெல்லாம் நீயாக பூத்திருக்கையில்
நிஜத்துக்கென்ன அவரசம்
சொல்ல முடியுமா...?
காலம் தரும் இனிமைகளில் நீ என்
இதயத்தில் உற்சாக ஊற்றாய்..
கனவில் உன்னை நினைக்கையில்
சிந்தனையை தூண்டி விடும் மலர்க்கரமாய்..
வாழ்வில் தொலைந்தது எல்லாம்
இங்கு வந்தபின்பு கிடைத்ததோ?
இல்லை என்று சொல்ல
மனமேது..
கருத்துக்களை
அள்ளித்தெளிக்க
குவிந்த பாராட்டுகளா?
அன்பை பகிர்ந்தளிக்க
நெஞ்சக்கூடு சேர்ந்த
சொந்தங்களா?
துள்ளிவரும்
செந்தமிழின் வார்த்தைகளில்
தெறிக்கும் இன்ப
தேனாய் வரும் சுவையில்
கண்ட மயக்கத்தையா?
விவாத தீபம் ஏற்றி
வைத்து
இடையில் வெடிக்கும்
எரிமலையாய்
சீரும் கடலலையாய்.
பொங்கும்
புதுப்புனலாய்
அரங்கேறும்
வார்த்தைகளை அணிதிரட்டி
பொன்னான முடிவு தரும்
வாங்க பேசலாம்...
இதோ இனித்த நினைவுகள்
எல்லாம்
கைகளில் தவழும் “வாங்க
பேசலாம்”
மாத இதழாய்..
இதழில் புன்னகையூற
விரைந்து வந்திடுமே....”நிஜமாய்”....!!!
-சங்கர் நீதிமாணிக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக