செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

இப்படி நாம் காதலிப்போம்

அன்பெனும் யாழினை மீட்டி வரும்.. 
வள்ளுவன் வார்த்தையின் உயிர்வரியே.. 
காணிநிலத் தோட்டத்திலே 
அந்த மீசைக்கவியின் பாடலுடன் 
மோகத்தை வென்றிட காதலிப்போம்... 
வண்ணமலர் கொஞ்சும் சோலையிலே.. 
கள்ளுண்ட வண்டினைப் போல் காதலிப்போம்.. 
சாதிகளற்ற ஓருலகம் நம் சந்ததி படைத்திடுவே 
அன்பெனும் சமயத்தை வார்த்தெடுத்து – அந்த 
மதத்தின் முகத்திரை பிய்த்திடுவோம்.... 
வேற்றுமை கொன்று மனதாலே 
ஓருயிராய் வாழ காதலிப்போம்.... 
கம்பனும் கவிகாளியும் காணாத – ஒரு 
காதலை கண்டிட காதலிப்போம்... 
இன்றைய இணைய உலகத்திலே கூகுளில் தேடக் 
கிடைக்காத ஒரு காதலை கண்டிட காதலிப்போம்... 
கற்கால உலகம்போய் கணினி உலகம் இப்போதும்.. 
வரும் மெய்நிகர் உலகிலும் வாழ்ந்திடும் – ஓர் 
காதலை படைக்க வா...காதலிப்போம்.. 
தூதிலே வந்த காதலைக் கண்ட நாம் 
வாட்ஸ்அப் கொண்டும் காதலிப்போம்.. 
இப்படி நாம் காதலிப்போம் – ஆனால் 
அன்பினாலே காதலிப்போம். 

கருத்துகள் இல்லை: