புதன், 4 பிப்ரவரி, 2015

பிப்ரவரி 4, உலக புற்று நோய் தினம்

அன்பின் வணக்கம்..
யார் சொல்லுவார் கிளியே..?
இன்று பிப்ரவரி 4, உலக புற்று நோய் தினம்.
இது உலக மக்களிடையே புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதனை தடுக்கவும், ஒருக்கால் வந்து விட்டால் உடனடி கண்டுபிடிப்பு, உடனடி சிகிச்சை செய்வதற்காகவும்,உருவாக்கப்பட்டது. யார் இந்த வேலையை இத்தனை அக்கறையுடன் செய்வது என்கிறீர்களா?2000 ம் ஆண்டில், பாரிசில் நடந்த புற்று நோய்க்கு எதிரான உலக சம்மிட் கூட்டத்தில் , இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ம் நாள் , உலக புற்றுநோய் விழிப்பு தினமாக அனுசரிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
புற்று நோயை சகட்டு மேனிக்கு தாக்கி, அதனை புறமுதுகிட்டு ஓட வைக்கும் முயற்சியில், 90% சதம் வெற்றியை ஈட்டியவள் என்ற தன்னம்பிக்கையுடனும், நீங்கள் அனைவரும் அன்பால் கொட்டிக் கொடுத்த பெருமையுடனும், இந்த உலகை ஓடியாடி, மிக்கமகிழ்வோடு சந்தித்துக்கொண்டிருக்கிறேன். மேலும் உங்களின் அன்பாலும், ஆதரவாலும், உந்துசக்தியாலும்,அதனால் ஈட்டிய மனம் மற்றும் உடல் வலுவாலும் தான், அந்த நெஞ்சுரத்தொடுதான் இந்த கட்டுரையை, புற்று நோய் சம்பந்தப்பட்ட தகவல்களை, உறுதியோடும், உங்கள் அனைவரின் துணையோடும் மனித இனம் மற்றும் வாழ்வியலில் மிகுந்த நம்பிக்கையோடும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
இன்றைய நிலைமை என்ன?
சர்வதேச, புற்றுநோய் ஆராய்ச்சி முகமம்,(he International Agency for Research on Cancer (IARC)) 2013 , டிசம்பர்
12 ம் நாள்,அன்று ஜெனிவாவில் நடந்த கூட்டத்தில் உலகத்துக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் கொடுத்த தகவல்தான்.. சமீபத்தியது. இதுதான் உலகம் நல நிறுவனத்தின் (World Health Organization) சிறப்பு புற்றுநோய் முகமம் ஆகும். அதன்படி, இதுவரை வந்த தகவல்கள்படி, 2012,ல் புதிய புற்றுநோயாளிகள் மட்டும் 14.1 மில்லியன் ஆகும். இதில் இறந்தவர்கள் எண்ணிக்கை. 8.2 மில்லியன். ஆனால் 2008 ல் புற்று நோயாளிகள் 12.7 மில்லியன்: இறப்பு:7,6 மில்லியன். ஒட்டு மொத்தமாக 2012, ல் உலகம் முழுவதும் உள்ள 15 வயதுக்கு மேற்பட்ட புற்றுநோயாளிகள்,32.6 மில்லியன். இதில் அதிக பட்சமாக வருவது நுரையீரல் புற்றுநோய்:1.8 மில்லியன் ;13%; அடுத்து இரண்டாம் இடம் பார்ப்பாக புற்று நோய்க்குத்தான. 1.7 மில்லியன், மொத்த எண்ணிக்கையில் 11.9%.மலக்குடல் புற்று 1/4 மில்லியன்,9.7%, அதிக இறப்பு நிகழ்வது என்பது நுரையீரல் புற்று நோயால்தான்.என்பது, இவைகளில் தான் அதிகம்.அதாவது 1.6 மில்லியன், மொத்த புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் 19.4%. கல்லீரல் புற்றால் இறப்பு.7 0.8 மில்லியன்..வயிறு 0.8 மில்லியன் '19.1 % ல்லியன், ,மொத்தத்தில்
ஆனால் வரும் 2015 க்குள் உருவாகும் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையைக் கேட்டால், நமக்கு மயக்கம் வந்து கீழே விழப்போகிறோம்.கவனகாக இருங்கள. 2015, வரப்போகிற புதிய உலகில், உருவாகப போகிற புற்று நோயாளிகள.. 19.3 மில்லியன் என்று, கேட்டால் கண்ணைக் கட்டுகிறது. 2012 ல் புற்று நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை:64.8%. நமமிப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இத எண்ணிக்கை இன்னும் அபரிதமாக கூடும்.
2008 லிருந்து இன்றுவரை, மார்பக புற்று நோயின் வளர்ச்சி என்பது அபரிதமாக 20% கூடியுள்ளது. அதுபோலவே இறப்பும் 14% aஅதிகரித்துள்ளது.இதுவரை ஆய்வு செய்துள்ள 180 நாடுகளில் 140 நாடுகளில் பெண்களிடையே இந்த நண்டுகளின் அரசாட்சி அதிகரித்துள்ளது.
வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகளில், மார்பக புற்று நோய் எனபது உயிரைக்குடிக்கும் நோயாக மாறியுள்ளது வேதனையும், கவனிக்கப்பட வேண்டிய விஷமும் ஆகும். இதன் காரணி இ ப்போது மாறியுள்ள வாழ்வியல் முறையே என அறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் புற்று நோய் விழிப்புணர்வு தொடர்பாக பிரச்சாரம் செய்யப்படுகிறது
புற்று நோய் பற்றி சில தகவல்கள் :
உலகில் தினமும் 20,000 மனிதர்கள் புற்றுநோயால் இறந்துபோகின்றனர்.
எய்ட்ஸ், காசநோயைவிட் அதிக இறப்பு புற்றுநோயால்,ஏற்படுகிறது.
உலகில் 180 வகை புற்று நோய்கள உள்ளன.
30% புற்று நோய்கள், ,மது &புகையிலையை தவிர்த்தல், நல்ல ஆரோக்கியமான உணவு, தினந்தோறு ம் உடற்பயிற்சி இவற்றால் தடுத்துவிட முடியும்.
உலகில் இன்று 28 மில்லியன் மனித உயிர்கள் புற்று நோயால் பிழைத்த உயிர் வாழ்கின்றன. ,
நடை பயிற்சியே..25% மார்பக புற்றுநோயைத் தடுத்து நிறுத்திவிடும்.
சிகரெட்டில் உள்ள 6,800 வேதிப்பொருள்களில், 68 புற்று நோயை உருவாக்கும்.
நிஇங்கள் எடுத்துக் கொள்ளும் multivitamin மாத்திரைகள் புற்று நோய மற்றும்,இதய நோய்களை உருவாக்கும் என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மார்பக் புற்று நோய் அமெரிக்காவில் வருடந்தோறும் 450 ஆண்களைப் பலி வாங்குகிறது.
இன்றைய புற்று நோய் தினத்தின் கரு.."எதுவும் நம்மைத் தாண்டியதல்ல.." Not beyond us..
நாம் புற்று நோயை வென்றுவிடுவோம் .முடியும் என்பதுதான்.

கருத்துகள் இல்லை: