வா மனிதா.....
வானேறி வையத்தை ஆளும் வேளையிலே
சாதிக்கும் மதத்திற்கும் சண்டை எதற்கு...?
நாம் சாதிக்கா பிறந்தோம்...?
இல்லை..சாதிக்க அல்லவோ...!
மதமென்னும் போதையிலே மானுடத்தை புதைக்கிறோமே..!
வகுப்பறையில் பிரிக்காத சாதி மதம் – நம்மை
வெளியுலகில் பீடித்த மாயமென்ன....?
ஆழியிலே வந்த பேரலைகள் உன் சாதி உன் மதம்
என பிரித்தா அள்ளியது இன்னுயிரை...
நட்போடு கைகோர்த்து நடைபோடு
பிரிவினையில் சண்டையிட வெட்கப்படு
அன்(பு)பூ மலரும் மனத்தோட்டத்திலே
சாதிமத முட்களை வெட்டி எருவாக்கு...
எழுச்சியோடு வா நண்பா...
சாதிக்கு சாவுமணி அடித்து – அதை
மதத்தின் மரணக்குழியில் புதைத்திடுவோம்..
நினைவில் வைப்போம் நண்பா – நாம்
சாதிக்குப் பிறக்கவில்லை - சாதிக்கவே...
மதத்திற்கு பிறக்கவில்லை – மானுடத்திற்கே...
சாதி ஒழி..மதம் அழி... சாதி....
வானேறி வையத்தை ஆளும் வேளையிலே
சாதிக்கும் மதத்திற்கும் சண்டை எதற்கு...?
நாம் சாதிக்கா பிறந்தோம்...?
இல்லை..சாதிக்க அல்லவோ...!
மதமென்னும் போதையிலே மானுடத்தை புதைக்கிறோமே..!
வகுப்பறையில் பிரிக்காத சாதி மதம் – நம்மை
வெளியுலகில் பீடித்த மாயமென்ன....?
ஆழியிலே வந்த பேரலைகள் உன் சாதி உன் மதம்
என பிரித்தா அள்ளியது இன்னுயிரை...
நட்போடு கைகோர்த்து நடைபோடு
பிரிவினையில் சண்டையிட வெட்கப்படு
அன்(பு)பூ மலரும் மனத்தோட்டத்திலே
சாதிமத முட்களை வெட்டி எருவாக்கு...
எழுச்சியோடு வா நண்பா...
சாதிக்கு சாவுமணி அடித்து – அதை
மதத்தின் மரணக்குழியில் புதைத்திடுவோம்..
நினைவில் வைப்போம் நண்பா – நாம்
சாதிக்குப் பிறக்கவில்லை - சாதிக்கவே...
மதத்திற்கு பிறக்கவில்லை – மானுடத்திற்கே...
சாதி ஒழி..மதம் அழி... சாதி....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக