பழமொழி விளக்கம்
ஆறிலும் சாவு
நூறிலும் சாவு
குருஷேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சென்று சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறாள். அப்போது கர்ணன், தனது தாய் குந்திதேவிக்கு பதிலுரை அளிக்கிறான். அதில், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி இறப்பது உறுதி என்பது எனக்குத் தெரியும். ஆகவே, ஆறிலும் சாவுதான் அப்படி இல்லாவிட்டால் நூறிலும் சாவுதான். எப்படி இறந்தால் என்ன? அதற்கு நான் செஞ்சோற்றுக் கடன் கழிச்சு என்னை வளர்த்து ஆளாக்கிய எனது நண்பன் துரியோதனிடமே இருந்து உயிரை விடுகிறேனே என்றான் கர்ணன். இப்படி கர்ணன் கூறியதே இந்த பழமொழி. இத்தகைய கர்ணனையே கொடைத்தன்மைக்கும் நல்ல நட்புக்கும் உதாரணமாக கூறுவது யாவரும் அறிந்ததே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக