சும்மா வந்ததா
சுதந்திரம்...
வாழ்க்கை தொலைத்து
வலியைத்
தாங்கி
வாங்கித்தந்தது
நாம்
சுவாசிக்கும்
இந்த
சுதந்திரம்...
வந்தவன்
போனான்...
இருந்தவன்
பெற்றான்...
வாசமலர்
வீசும்
ஜனநாயக
பூ என்று
காகிதப்
பூவை
நம்
காதில் சுற்றினர்...
வாழ்வு
முன்னேருமென்று
வாக்களித்து
காத்திருந்தோம்..
கனிந்திடுமே
சுவைப் பழமே..
பறந்திடுமே
கவலையெல்லாம்..
என
களித்திருந்தோம்.....
அழகான
பழமென்று
சுவைக்கப்
பார்த்தால்
லஞ்ச
லாவண்ய
கூட்டுக்கொள்ளை
வண்டு
துளைத்த
சுவையற்ற
பழமாகிப்
போனதிலே
சோர்ந்து
போனோம்..
ஐந்தாண்டு
ஆயுதம்
கையிலுண்டு
கொல்வோம்
அந்த
வண்டுகளை
என்று
எண்ணி
எண்ணி ஏமாந்தோம்.
பழங்கதைகள்
பேசிப்பேசி
முனைமழுங்கிய
ஆயுதத்தை
கைக்கொண்டோம்...
பட்டதெல்லாம்
போதுமினி
கொட்டம்
அடக்கிடவே
புதிய
கருவி கைக்கொண்டு
பழந்துளைக்கும்
வண்டுகளை
வென்றெடுப்போம்..
சும்மா
வந்ததில்லை
சுதந்திரம்
என்பதை
வரும்
தலைமுறையும்
அறியும்
வண்ணம்
ஒரு
நல்ல
பாதை அமைத்திடவே
முதலடியை
எடுத்து வைப்போம்..
ஆடுவோமே
பள்ளு பாடுவோமே
ஆனந்த
சுதந்திரம் அடைந்து விட்டோமென்று.......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக