வியாழன், 31 ஜூலை, 2014

தாய் பால்

முகநூல் பதிவு
- நவீன் கிருஷ்ணன் 
( மனிதன் )



தாய் பால் எல்லாம் பழங்கதையாகி போனது.....

இன்றைய தமிழ் மரபில் ஆணும் பெண்ணும் பொருள் ஈட்டுவதற்க்காக இந்த உலகத்திற்கு வந்த உன்னத பிறவிகள் என்பது போல் ஒரு வாழ்வியல் முறை மாற்றப்பட்டுள்ளது என்பதும்,பொருளாதாராத் தேவை இருக்குதோ இல்லையோ காலை முதல் மாலை வரை ஒரு வேலைக்கு ஓட வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உணர்கிறோமா?


குழந்தை பிறந்ததும் அதை மடித்து ஊருக்கு அனுப்பிவிட்டு இருவரும் பொருளீட்டுவதில் கவனம் செலுத்த மட்டும் ஒரு தலைமுறை தயாராகி வருகிறதே.பாவம் இக்காலக்கட்டத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்பால் என்பதே பழங்கதை ஆகி வருகிறதே அதை உணர்கிறோமா?


தனக்கு பிடிக்கவிட்டாலும் குடும்ப அழுத்தம் காரணமாகவும்,பெற்றோர் உறவினர்களின் கேள்விகளுக்கு அஞ்சி அல்லது அந்த தொந்தரவில் இருந்து தப்பிக்க இந்த தலைமுறை பெண்கள் இளம் குழந்தையைக் கூட காப்பகத்தில் விட்டுவ்ட்டு வேலை வேலை என்று ஓடுகிறார்களே இவர்கள் உருவாக்கும் பொருளைக் கொண்டு எதை வாங்க போகிறார்கள் என்ற உண்மையை யோசித்தோமா?


பெரும்பாலும் பொருள் இல்லாதவர்களைவிட, நடுத்தர வர்க்கத்தை விட வசதி படைத்தவர்கள் தான் அதிகமாக ஒடுவதை பார்க்கிறோமே,இவர்கள் என்றாவது இந்த வாழ்க்கையில் பணத்தின் மதிப்பீட்டை உணர்ந்ததுண்டா?
இதுதானா நம் முன்னோர்களும் நம் சமூகமும் நமக்கு சொல்லிக்கொடுத்தது?இதை தவறென்றால் தவிர்க்க முயற்சிக்க வேண்டாமா?


இன்று இருபது வயதோ,அறுபது வயதோ யாரை வேண்டுமானாலும் கேளுங்கள் “உங்களுக்கு பிடித்தது எது,நீங்கள் எதில் தன்னிறைவு அடைகிறீர்கள்”என்று.90 சதவீதம் பேர்

வாழ்க்கை என்றால் என்ன????

எப்படி நிறைவான வாழ்வை வாழ்வது????

எப்படி மன அமைதி பெறுவது????

எப்படி பிரச்சனையை எதிர்கொள்வது????

எப்படி ஏற்ற இறக்கங்களை சமாளிப்பது????

என்ற தெளிவு இருக்கிறதா என்றால் இல்லை என்ற உண்மை நமக்கு விளங்கும்....

எங்கே சென்றது நம் வாழ்வியல் அறிவுகளும் கோட்பாடுகலும்???

இன்று முனைவர் பட்டம் பெற்ற பெற்றோர்கள் முதல் பெரும்பாலான படித்தவர்கள் வாழ்வின் கடைசி வரை பணம் ஈட்டுவதே வாழ்க்கை என்று வாழ்கிறார்களே!

அதை பார்த்து வளரும் அடுத்த தலைமுறை எப்படி பட்ட வாழ்வியல் சூழல்களை அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் சற்று சிந்தித்து பாருங்கள்...


இன்று தேவையான அளவு பொருளை ஈட்டியவுடன் அதை வைத்து வாழவும்,தனக்கு பிடித்ததை இந்த மொழிக்கும்,இயற்கைக்கும்,இனத்திற்க்கும் மற்றும் சமுதாயத்திற்க்கும் செய்வதுமான வாழ்வியலை எத்தனைபேர் மேற்கொள்கிறார்கள்? பணி ஓய்வு பெற்றதும் பலருக்கு பைத்தியமே பிடித்துவிடும் நிலையை காண்கிறோம் இவர்களிடம் இருந்து அடுத்த தலைமுறை எந்த வாழ்வியலை கற்றுக்கொள்ள முடியுமா????

இன்றைய தலைமுறை நம் இன்றைய வாழ்வியலில் எடுத்துக் கொள்வதை விட கேள்வி கேட்டு வாழ்க்கையை அறிந்து,வாழ்வின் நோக்கத்தை புரிந்து விட்டு விட்டுச் செல்லக்கூடிய பல வாழ்வியல் நெறிகளும்,சிந்தனைகளும் இருக்கிறது என்று உணர்ந்து,


“எவருக்கும் எவரும் தாழ்ந்தவரில்லை
அவரவர் திறமை ஒரு துறையில்
எல்லாம் அறிந்தவர் எவருமில்லை
எல்லாம் அறிந்தவர் மனிதரில்லை”


என்பதை உணர்ந்து,அனைவரையும்,அனைத்தையும் கேள்வி கேட்டு,தெளிவு பெற்று,விளக்கம் தெரியாதா,புரியாதா சம்பிரதாயங்களை களைந்து,
புரிதலோடு கூடிய ஒரு பகுத்தறிவுடன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் அதுவே நம் தமிழ் சூழலிலும்,இலக்கியங்களிலும்,முன்னோர்களும் சொல்லவரும் செய்தியாகும்........

1 கருத்து:

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
நன்றி.